24 April 2021 TAMIL Murli Today – Brahma Kumaris

April 23, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. This is the Official Murli blog to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! இப்போது நீங்கள் எல்லை இல்லாத உலகின் எஜமானர் ஆகப் போகிறீர்கள், யோகபலத்தின் மூலம் உலக இராஜ்யத்தை எடுப்பதும் கூட அதிசயமாகும்.

கேள்வி: -

நாடகத்தின் எந்த பந்தனத்தில் தந்தையும் கூட கட்டுப்பட்டுள்ளார்?

பதில்:-

நான் குழந்தைகளாகிய உங்கள் முன்பாக நேரில் வந்தே ஆக வேண்டும், நான் இந்த பந்தனத்தில் கட்டுப்பட்டுள்ளேன் என பாபா கூறுகிறார். நான் வராத வரை சிக்கலாகியிருக்கும் நூல் கண்டை சீர்ப்படுத்த முடியாது. மற்றபடி நான் உங்களின் மீது இரக்கம் காட்டவோ ஆசீர் வாதம் செய்யவோ வருவதில்லை. நான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதில்லை. நான் உங்களை தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்குவதற்காக வருகிறேன்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

உங்களை அடைந்து நாங்கள். . .உலகையே அடைந்துவிட்டோம்.

ஓம் சாந்தி. பாடலின் வார்த்தைகளைக் கேட்டு குழந்தைகளாகிய உங்களுக்கு உரோமம் சி-ர்த்துப் போக வேண்டும், ஏனென்றால் அவரே நேரில் அமர்ந்திருக்கிறார். முழு உலகிலும் எத்தைனையோ வித்வான்கள், பண்டிதர்கள், ஆச்சாரியர்கள் இருந்தாலும், எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஒவ்வொரு 5000 வருடங்களுக்குப் பிறகும் வருகிறார் என்பது மனிதர்கள் யாருக்கும் தெரியாது. குழந்தை களுக்குத்தான் தெரியும். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே உங்களுடையவன் என குழந்தை களும் சொல்கின்றனர். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே என்னுடைய குழந்தைகள் என தந்தையும் அதேபோல சொல்கிறார். அவர் அனைத்து ஆத்மாக்களின் தந்தை என நீங்களும் அறிவீர்கள். அனைவருமே கூப்பிடுகின்றனர். பாருங்கள், இராவணனின் நிழல் எவ்வளவு பரவி யுள்ளது என தந்தைப் புரிய வைக்கிறார். யாரை நாம் பரமபிதா பரமாத்மா என்று சொல்கிறோமோ அவரை பிறகு தந்தை என சொல்வதனால் வரும் குஷி ஏன் இருப்ப தில்லை என யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதை மறந்துவிட்டுள்ளனர். அந்த தந்தையே நமக்கு ஆஸ்தி கொடுக் கிறார். தந்தை தாமே புரிய வைக்கிறார், இவ்வளவு சகஜமான இந்த விஷயத்தை யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை. இவர் அவரே தான் – இவரைத்தான் ஓ குதா (ஈஸ்வரா), ஓ இராமா என முழு உலகமும் கூக்குரலிட்டு அழைக்கிறது என தந்தை புரிய வைக்கிறார். கூப்பிட்டபடியே உயிரை விட்டு விடு கின்றனர். அந்த தந்தை இங்கே உங்களுக்கு ஞானத்தைக் கற்பிக்கிறார். உங்களின் புத்தி அங்கே சென்றுவிட்டது. கல்பத்திற்கு முன்பு போலவே தந்தை வந்துவிட்டார். ஒவ்வொரு கல்பமும் பாபா வந்து தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாக்கி (பதிதரிலிருந்து பாவனராக்கி) துர்க்கதியிலிருந்து சத்கதியில் அழைத்துச் செல்கிறார். அனைவரின் பதீத பாவன தந்தை என பாடவும் செய்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அவர் முன் அமர்ந்திருக் கிறீர்கள். நீங்கள் மிகவும் அன்பான இனிமையான குழந்தைகள். இது பாரதவாசிகளின் விஷயமே யாகும். தந்தையும் பாரதத்தில் தான் பிறவி எடுக்கிறார். நான் பாரதத்தில் பிறவி எடுக்கிறேன் என தந்தை சொல்கிறார், ஆக அவர்தான் அனைவருக்கும் கண்டிப்பாக பிடித்தமானவராக இருக்கிறார். நினைவும் கூட அனைவரும் அவரைத்தான் செய் கின்றனர், யார் எந்த தர்மத்தைச் சேர்ந்தவர் களோ அவர்கள் தம்முடைய தர்ம ஸ்தாபகர் களை நினைவு செய்கின்றனர். நாம் ஆதி சனாதன தர்மத்தவர்களாக இருந்தோம் என பாரதவாசிகளுக்கே தெரியாது. பாரதமே பழமையான தேசம் என பாபா புரியவைக்கிறார் என்றால், பாரதம் மட்டுமே இருந்தது என யார் சொன்னது? என கேட்கின்றனர். பற்பல விஷயங்களைக் கேட்கின்றனர். சிலர் ஒன்று சொல்கின்றனர், வேறு சிலர் வேறொன்று சொல்கின்றனர். கீதையை சிவ பரமாத்மா சொன்னார் என யார் சொன்னது, கிருஷ்ணரும் பரமாத்மாவாக இருந்தார், அவர் சொன்னது என சிலர் சொல்கின்றனர். பரமாத்மா எங்கும் நிறைந்தவர். முழு விளையாட்டும் அவருடையதேயாகும். இந்த அனைத்து ரூபங்களும் பகவானுடையதாகும். பகவானே அனைத்து ரூபங்களையும் தரித்து லீலைகள் புரிகின்றார். பகவான் தான் விரும்பியதைச் செய்ய முடியும். மாயையும் கூட எவ்வளவு பலசாலி என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். பாபா நாங்கள் கண்டிப்பாக ஆஸ்தியை எடுப்போம், நரனிலிருந்து நாராயணன் ஆவோம் என இன்று சொல்கின்றனர், நாளை இருக்க மாட்டார்கள். எவ்வளவு பேர் சென்று விட்டனர், மணமுறிவு (விவாகரத்து) கொடுத்துவிட்டனர் என நீங்களும் அறிவீர்கள். மம்மாவை மோட்டார் வாகனத்தில் அழைத்துச் சென்று, வந்து கொண்டிருந்தனர், இன்று அவர்கள் இல்லை. இப்படிப்பட்ட நல்ல நல்லவர்கள் கூட மாயையின் தொடர்பில் வந்து இப்படி விழுகின்றனர், ஒரேயடியாக கீழே விழுந்து விடுகின்றனர். யார் கல்பத்திற்கு முன்பு புரிந்து கொண்டனரோ அவர்கள் தான் புரிந்து கொள்வார்கள். இன்றைய நாட்களில் உலகில் என்னவெல்லாம் ஆகிவிட்டுள்ளது மற்றும் குழந்தைகளாகிய நீங்கள் உங்களைப் பாருங்கள் என்னவாக ஆகிறீர்கள் என. பாடலைக் கேட்டீர்கள் தானே. நாங்கள் முழு உலகின் எஜமானர் ஆகத்தக்க ஆஸ்தியை எடுக்கிறோம் என சொல்கிறீர்கள். அங்கே எந்த எல்லைக்குட்பட்ட விஷயங்களும் கிடையாது. இங்கே எல்லைகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. எங்களுடைய ஆகாய எல்லைக்குள் உங்களுடைய விமானம் வந்தது என்றால் சுட்டுத் தள்ளிவிடுவோம் என சொல் கின்றனர். அங்கே எந்த எல்லைக் குட்பட்ட விஷயங்களும் இருக்காது. இந்தப் பாடலையும் பாடு கின்றனர், ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. பாபாவிடமிருந்து மீண்டும் நாம் உலகின் எஜமானாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பல முறை இந்த 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றினோம். ஏதோ கொஞ்ச காலத்திற்கு துக்கத்தை அடைந்தீர்கள், சுகம் நிறைய இருக்கிறது, ஆகையால் குழந்தைகளாகிய உங்களுக்கு அபாரமான சுகத்தைக் கொடுக்கிறேன் என பாபா சொல்கிறார். இப்போது மாயையிடம் தோற்றுப் போகாதீர்கள். தந்தைக்கு நிறைய குழந்தைகள் இருக்கின்றனர். அனைவருமே ஒருவரைப் போலவே நல்ல குழந்தைகளாக இருக்க முடியாது. சிலருக்கு 5-7 குழந்தைகள் இருப்பார்கள். அவர்களில் ஓரிருவர் கெட்ட குழந்தை களாக இருந்தார்கள் என்றால் தலை யையே கெடுத்து (சுற்ற வைத்து) விடுகின்றனர். இலட்சக் கணக்கான, கோடிக்கணக்கான பணத்தை இறைத்துவிடுகின்றனர். தந்தை முற்றிலும் தர்மாத்மா வாக (தர்மம் செய்பவராக) இருக்கிறார், குழந்தைகள் முற்றிலுமாக நஷ்டக்கணக்கில் இருக் கின்றனர். (பிரம்மா) பாபா இப்படிப்பட்ட பல உதாரணங்களைப் பார்த்திருக்கிறார்.

முழு உலகமும் இந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் குழந்தைகள் என குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். என்னுடைய பிறப்பிடம் இந்த பாரதமாகும் என தந்தை சொல்கிறார். அனை வருக்குமே தம்முடைய தாய் நாட்டின் மீது அக்கறை இருக்கிறது. வேறு இடத்தில் சரீரத்தை விட்டு விட்டால் பின் தம்முடைய ஊருக்கு எடுத்து வரு கின்றனர். தந்தையும் கூட பாரதத்தில் தான் வருகிறார். பாரதவாசிகளாகிய உங்களுக்கு மீண்டும் எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியைக் கொடுக்கிறார். நாங்களேதான் மீண்டும் தேவதைகளாக உலகின் எஜமானாக ஆகிக் கொண்டிருக் கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் சொல்வீர்கள். நாங்கள் உலகின் எஜமானாக இருந்தோம், இப்போது என்ன நிலை உண்டாகிவிட்டது! எங்கிருந்து எங்கே வந்து விழுந்து கிடக்கிறோம். 84 பிறவிகள் அனுபவித்து அனுபவித்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாடகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. இது வெற்றி மற்றும் தோல்வியின் விளையாட்டு எனச் சொல்லப் படுகிறது. இந்த விளையாட்டு பாரதத்தினுடையதுதான். இதில் உங்களுடைய நடிப்பு உள்ளது. இந்த நாடகத்தில் பிராமணர்களாகிய உங்களுடைய நடிப்பு அனைவரை விடவும் உயர்ந்ததிலும் உயர்ந்ததாக உள்ளது. நீங்கள் முழு உலகின் எஜமானன் ஆகிறீர்கள், அதிகமான சுகத்தை அனுபவிக்கிறீர்கள். நீங்கள் அனுபவிக்கும் சுகத்தின் அளவுக்கு வேறு யாரும் அனுபவிக்க முடியாது. பெயரே சொர்க்கமாகும். இது நரகமாகும். இங்குள்ள சுகம் காகத்தின் எச்சத்திற்குச் சமமாகும். இன்று இலட்சாதிபதியாக இருக்கின்றனர், அடுத்த பிறவியில் என்னவாக ஆவோம் என எதுவும் தெரியாது. இது பாவாத்மாக்களின் உலக மாகும். சத்யுகம் புண்ணிய ஆத்மாக்களின் உலக மாகும். நீங்கள் புண்ணிய ஆத்மாவாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் எனும்போது எந்த பாவமும் செய்யக் கூடாது. எப்போதும் பாபாவிடம் நேர்மையாக இருக்க வேண்டும். என்னுடன் தர்மராஜா துவாபரத்திலிருந்து எப்போதும் கூடவே இருக்கவே இருக்கிறார் என தந்தை சொல்கிறார். சத்ய, திரேதா யுகங்களில் என்னுடன் தர்மராஜா இருப்பதில்லை. துவாபரத்திலிருந்து நீங்கள் என் பெயரால் தான புண்ணியங்களை செய்தபடி வந்திருக்கிறீர்கள். ஈஸ்வரார்ப்பணம் என சொல் கின்றனர் அல்லவா. கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் போட்டுவிட்டதால் ஸ்ரீகிருஷ்ணா அர்ப்பணம் என எழுதிவிட்டனர். பிரதிபலனாக கொடுக்கக் கூடியவர் ஒரு தந்தையே ஆவார், ஆகையால் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் என சொல்வது தவறாகும். ஈஸ்வர அர்ப்பணம் என சொல்வது சரியாகும். ஸ்ரீகணேச அர்ப்பணம் என சொல்வதால் எதுவும் கிடைக்காது. எனினும் பாவனைக்காக அனைவருக்குமே ஏதாவது கொடுத்தபடி வந்துள்ளேன். என்னை யாருக்குமே தெரியாது. நாம் அனைத்தையுமே சிவபாபாவுக்கு சமர்ப்பணம் செய்து கொண்டிருக்கிறோம் என இப்போது குழந்தைகளாகிய நீங்கள்தான் அறிவீர்கள். நான் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைக் கொடுப்பதற்காக வந்துள்ளேன் என பாபாவும் சொல்கிறார். இப்போது இருப்பதே இறங்கும் கலை யாகும். இராவண இராஜ்யத்தில் செய்யக்கூடிய தான புண்ணியம் முதலானவைகளை பாவாத் மாக்களுக்கே கொடுக்கின்றனர். கலை இறங்கியபடியே போகிறது. ஏதோ கொஞ்சம் கிடைக்கவும் செய்கிறது, ஆயினும் அல்ப காலத்திற்கே. இப்போதோ, உங்களுக்கு 21 பிறவிகளுக்குக் கிடைக் கிறது. அதனை இராம இராஜ்யம் என சொல் கிறோம். அங்கே ஈஸ்வரனுடைய இராஜ்யம் என சொல்வதில்லை. இராஜ்யம் தேவி தேவதைகளுடையது ஆகும். நான் இராஜ்யத்தை ஆளுவ தில்லை என தந்தை சொல் கிறார். உங்களுடையதாக இருந்த, இப்போது மறைந்திருக்கக் கூடிய ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் மீண்டும் இப்போது ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தந்தை நன்மை செய்பவர் ஆவார், அவர் உண்மையான பாபா எனச் சொல்லப்படுகிறார். உங்களுக்கு தன்னுடைய மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியின் உண்மையான ஞானத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாபா உங்களுக்கு எல்லைக்கப்பாற்பட்ட வரலாறு புவியியலை கூறுகிறார். எவ்வளவு அபரிமிதமான வருமானம் உள்ளது. நீங்கள் சக்ரவர்த்தி இராஜா ஆகிறீர்கள். அவர்கள் பிறகு அந்த இம்சையின் சக்கரத்தைக் கொடுத்து விட்டனர். உண்மையில் இது ஞானத்தின் சக்கரமாகும். ஆனால் இந்த ஞானமோ மறைந்து போய்விடும். இவை உங்களுடைய முக்கியமான படங்களாகும் – ஒருபுறம் திரிமூர்த்தி, மறுபுறம் மரம் மற்றும் சக்கரம். சாஸ்திரங் களில் கல்பத்தின் ஆயுளை இலட்சக் கணக்கான வருடங்கள் என எழுதிவிட்டனர் என தந்தைப் புரிய வைத்திருக்கிறார். முழு நூல் கண்டும் சிக்கலாகியுள்ளது. தந்தையைத் தவிர வேறு யாரும் இந்த சிக்கலை சரிப்படுத்த முடியாது. தந்தை தாமே நேராக வந்திருக்கிறார். நாடகப்படி நான் வரவே வேண்டியிருக்கிறது. நான் இந்த நாடகத்தில் கட்டுப்பட்டிருக்கிறேன். நான் வரவே போவ தில்லை என்பது நடக்காத விஷயம். வந்து இறந்தவர்களை உயிர்ப்பித்து விடுவேன் அல்லது நோயிலிருந்து விடுவிப்பேன் என்பதும் கிடையாது. பாபா என் மீது இரக்கம் காட்டுங்கள் என பல குழந்தைகள் சொல்கின்றனர். ஆனால் இங்கே இரக்கம் முதலான விஷயங்கள் கிடையாது. எங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க ஆசீர்வாதம் செய்யுங் கள் என்பதற்காக நீங்கள் என்னை அழைக்கவில்லை. ஓ பதீத பாவனா வாருங்கள், துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுங்கள் என்று தான் அழைக்கிறீர்கள். சரீரத்தின் துக்கத்தை நீக்கக் கூடிய மருத்துவர்கள் இருக்கின்றனர். இதற்காக நான் வருகிறேனா என்ன! புதிய உலகமாகிய சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குங்கள் அல்லது அமைதி கொடுங்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். எங்களை வந்து நோயிலிருந்து குணப்படுத்துங்கள் என சொல்வதில்லை. எப்போதும் அமைதி அல்லது முக்தியில் இருக்கும் நிலை கிடைப்ப தென்பது முடியாது, நடிப்பை நடிக்கவே வேண்டும். கடைசியில் வருபவர்களுக்கு எவ்வளவு அமைதி கிடைக்கிறது. இன்று வரை வந்தபடி இருக்கின்றனர். இவ்வளவு சமயம் சாந்திதாமத்தில் இருந்தனர் அல்லவா. நாடகத்தின்படி யாருக்கு நடிப்பு இருக்குமோ அவர்கள் தான் வருவார்கள். நடிப்பு மாற முடியாது. பாபா புரிய வைக்கிறார் – சாந்தி தாமத்தில் பற்பல ஆத்மாக் கள் இருக்கின்றனர், அவர்கள் கடைசியில் வருவார்கள். இந்த நாடகம் முன்பே உருவாக்கப்பட்டது. கடைசியில் உள்ளவர்கள் கடைசியில் தான் வர வேண்டும். இது மரமாக உருவாகியுள்ளது. உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்கள் அனைத்தையும் புரிய வைக்க வேண்டும். இன்னும் கூட படங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும், கல்பத்திற்கு முன்பு போல்தான் வெளிப்படும். 84 பிறவிகளின் விரிவான விபரங்கள் மரத்தின் படத்திலும் உள்ளது; நாடகச் சக்கரத்திலும் உள்ளது. இப்போது ஏணியின் படம் வெளியாகியுள்ளது. மனிதர்கள் எதையும் அறிவதில்லை. முற்றிலும் முட்டாள்கள் போல் இருக்கின்றனர். ஞானக்கடலாகவும் அமைதிக் கடலாகவும் இருக்கும் பரமபிதா பரமாத்மா இந்த உடல் மூலமாக கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பது இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. நான் வருவதே உலகின் முதன் முதல் எஜமானாக இருந்தவரின் உடலில் என தந்தை கூறுகிறார். நாமும் கூட பிரம்மாவின் மூலம் பிராமணர் ஆகிறோம் என்பதை நீங்களும் அறிவீர்கள். கீதையில் இந்த விஷயங்கள் இல்லை. இவர் (பிரம்மா) தாமே நாராயணருக்கு பூஜை செய்பவராக இருந்தார், இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போதும் கூட கீதை படித்துக் கொண்டிருந்தார். இவர் பெரிய தர்மாத்மாவாக இருக்கிறார் என மனிதர்கள் புரிந்து கொள்வார்கள். இப்போது அந்த விஷயங்கள் மறந்தபடி இருக்கிறார். என்றாலும் இவர் கீதை முதலானவைகளைப் படித்திருந்தார் அல்லவா. நான் இவையனைத்தையும் அறிவேன் என (பிரம்மா) பாபா சொல்கிறார். நாம் இப்போது யார் முன்பாக அமர்ந்திருக்கிறோம் என இப்போது நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், யாரால் உலகின் எஜமானன் ஆகிறீர்களோ பிறகு அவரையே அடிக்கடி ஏன் மறந்து போகிறீர்கள்? உங்களுக்கு 16 மணி நேரம் கொடுக்கிறேன், மற்ற சமயத்தில் தனது சேவையை செய்யுங்கள். தனது சேவை செய்கிறீர்கள் என்றால் உலகின் சேவை செய்கிறீர்கள். கர்மங்கள் செய்தபடியே குறைந்தபட்சம் 8 மணி நேரம் தந்தையை நினைவு செய்யும் முயற்சி செய்யுங்கள். இப்போது முழு நாளில் 8 மணி நேரம் நினைவு செய்ய முடிவதில்லை. அந்த (காரியங்கள் செய்தாலும் செய்யாத தன்மை) நிலை எப்போது ஏற்படுமோ அப்போது இவர்கள் நிறைய சேவை செய்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளலாம். நாம் அதிகமாக சேவை செய்கிறோம் எனப் புரிந்து கொண்டு விட வேண்டாம். மிகவும் முதல் தரமாக சொற்பொழிவாற்றுகின்றனர், ஆனால் நினைவின் தொடர்பு அறவே இல்லை. யோகத்தின் யாத்திரையே முக்கியமாகும்.

தலை மீது பாவ கர்மங்களின் சுமை நிறைய உள்ளது ஆகையால் அதிகாலை எழுந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். ஆத்மா இரவில் ஆத்ம அபிமானி ஆகிவிடுகிறது, அதனை உறக்கம் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தந்தையை நினைவு செய்யுங்கள் என தந்தை கூறு கிறார். இப்போது தந்தை சொல்கிறார் – மன்மனாபவ. இது ஏறும் கலையின் மந்திரமாகும். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தந்தையிடம் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். நன்மை செய்யக் கூடிய தந்தையின் குழந்தைகள் நீங்கள், ஆகையால் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். நல்ல தகுதியான குழந்தைகள் ஆக வேண்டும்.

2. கர்மங்கள் செய்தபடியே குறைந்தது 8 மணி நேரம் கண்டிப்பாக நினைவில் இருக்க வேண்டும். நினைவுதான் முக்கியம், இதன் மூலமே பாவ கர்மங்களின் சுமையை இறக்க வேண்டும்.

வரதானம்:-

சில நேரம் முயற்சியாளர் என்ற வார்த்தை கூட தோல்வி அடைவதில் அல்லது வெற்றி கிடைக்காத நிலையில் நல்ல கேடயம் ஆகிவிடுகிறது. எப்பொழுதாவது ஏதாவது தவறு ஏற்படும் பொழுது நாங்கள் இப்பொழுது முயற்சியாளர்கள் தானே என்று கூறு கின்றீர்கள். ஆனால், சரியான முயற்சியாளர்கள் ஒருபொழுதும் தோல்வி அடைய முடியாது. ஏனெனில், புருˆôர்த்தம் என்ற வார்த்தையின் சரியான அர்த்தமே தன்னை புருஷ் அதாவது தன்னை ஆத்மா எனப் புரிந்து நடப்ப தாகும். அத்தகைய ஆன்மிக ஸ்திதியில் இருக்கக்கூடிய புருˆôர்த்திகள் எப்பொழுதும் இலக்கை முன்னால் வைத்துச் செல்வார்கள். அவர்கள் ஒருபொழுதும் நிற்கமாட்டார்கள், தைரியம், உற்சாகத்தை விடமாட்டார்கள்.

சுலோகன்:-

Daily Murlis in Tamil: Brahma Kumaris Murli Today in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top